ETV Bharat / business

சீனாவுக்கு அடுத்த செக்! தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள்!

இலகுவாக இருந்த வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரையில் சீனா, வியட்நாம், மலேசியா, ஹாங்காங், கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டன.

import restrictions on colour television

author img

By

Published : Jul 31, 2020, 5:55 PM IST

டெல்லி: வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதிகளைக் குறைக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?

“முன்னதாக, இலவசமாக இருந்த வண்ண தொலைக்காட்சியின் இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளின் கீழ் ஒரு பொருளை இறக்குமதி செய்ய முயன்றால் அந்த பொருளின் இறக்குமதியாளர், வர்த்தக அமைச்சகத்தின் டிஜிஎப்டி இடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தடைசெய்யப்பட்ட சீன செயலிகள்: பப்ஜி உள்பட மேலும் 47 செயலிகளுக்கு தடையா?

இந்தியாவிற்கு தொலைக்காட்சி பெட்டிகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடு சீனா. அதைத் தொடர்ந்து வியட்நாம், மலேசியா, ஹாங்காங், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.