இந்தியப் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே உயிர்க் கொல்லியான கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் கதிகலங்க வைத்துள்ளது.
இந்தக் கரோனா வைரஸ் தாக்குதலில், இதுவரை 130க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பாதிப்பால், நாட்டின் ஓட்டுமொத்த வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி," கரோனா மற்றும் பொருளாதார சீரழிவால் இந்தியாவில் சுனாமி போன்ற பேரழிவு வந்துகொண்டு இருக்கிறது.
ஆனால் மத்திய அரசு இதைப் பற்றி கவலை கொள்ளாமல், அமெரிக்க அதிபர் டிரம்ப், பொருளாதார கருத்து கணிப்பு நிறுவனங்களான மூடிஸ், எஸ் & பி, இந்தியப் பொருளாதாரம் குறித்து என்ன கருத்து தெரிவிக்கின்றனர் என்பதிலேயே கவனத்தைச் செலுத்தி வருகின்றது. மேலும் பிரதமர், பொருளாதாரச் சரிவை ஒப்புக்கொள்ளாமல் தன் தலையில் தானே மண்ண அள்ளி போட்டுக்கொண்டுள்ளார்" என அவர் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!