இந்தியாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தவிர்க்கமுடியாத பயணங்களைத் தவிர மற்றப்பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க அரசு அறிவுறுத்திவருகிறது. மேலும், வைரஸ் பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை தீவிரமாக வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவிலிருந்து முகக்கவசம், வென்ட்டிலேட்டர் தயார் செய்யும் துணிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய உடனடியாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருந்தகங்களில் மருத்துவ உபகரணங்கள் பதுக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவை காரணமாக விலை ஏற்றம் ஏற்படாதவகையில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் முகக்கவசம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு!