பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி அதன் மூலம் நிதித்திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது. அதன் முக்கிய முன்னெடுப்பாக திருச்சி உள்ளிட்ட 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி, அமிருதசரஸ், இந்தூர், புவனேஸ்வர், ராய்பூர், வாரணாசி ஆகிய ஆறு பெரிய விமான நிலையங்களையும், ஹூப்ளி, திருப்பதி, ஔரங்காபாத், ஜபால்பூர், காங்கரா, குஷிநகர், கயா உள்ளிட்ட ஏழு சிறிய விமான நிலையங்களையும் தனியாருக்கு விற்க இந்திய நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் சுமார் ரூ.3,660 கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் இதுவரை லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்பூர், திருவனந்தபுரம், கௌஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை அரசு தனியாருக்கு விற்றுள்ளது. மேற்கண்ட ஆறு விமான நிலையங்களை இயக்கும் உரிமையை அதானி குழுமம் 50 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு குட்பை சொன்ன ஃபோர்டு - 4000 தொழிலாளர்களின் கதி என்ன?