ETV Bharat / business

தொடங்கியது அமைச்சர்கள் குழு கூட்டம்! - அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லி: மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கியது. பொருளாதார திட்டங்கள் குறித்து ஆலோசிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடங்கியது அமைச்சர்கள் குழு கூட்டம்
தொடங்கியது அமைச்சர்கள் குழு கூட்டம்
author img

By

Published : May 23, 2020, 6:52 PM IST

கரோனா பாதிப்பில் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.

கரோனா நிவாரணமாக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பின்பு 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து கட்டங்களாக அறிவித்தார்.

இதன் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் EMI செலுத்த கால நீட்டிப்பு, ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்பின், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஆறு நாட்களில் இந்த அமைச்சர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக இன்று நடைபெறுகிறது. பொருளாதார திட்டங்களை பற்றி இந்த கூட்டத்தில் பேசக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் ஏலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.