கரோனா வைரஸ் பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேசெல்வதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி மத்திய மாநில அரசு வலியுறுத்திவருகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளிவராமல் முடிந்தவரை தவிர்த்தனர். ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமல் வீட்டில் இருந்தால் கரோனா வைரஸ் தொற்றை விரைவில் கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்திவருவதால் அனைத்து கடைகளையும் மூட மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி நகை வணிகர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் உள்ள 31 ஆயிரம் நகைக் கடைகள் வரும் 31ஆம் தேதிவரை இயங்காது எனத் தெரிவித்துள்ளார்.
இதன் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 45 நிமிடங்கள் பங்குச்சந்தை நிறுத்திவைப்பு!