இந்தியாவில் கோவிட்-19 லாக்டவுன் காரணமாக பல்வேறு துறைகள் முற்றிலுமாக முடங்கின. பொருளாதார நடவடிக்கைகள் சுணக்கம் காரணமாக வணிகர்கள் பெரும் பாதிப்பைக் கண்ட நிலையில், தங்கம் விற்பனை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.ஆர்.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், கோவிட் லாக்டவுன் தாக்கத்திலிருந்து தங்க நகை வியாபாரம் தற்போது மீண்டுவருகிறது. குறிப்பாக நடப்பாண்டின் முதல் காலகட்டத்தில் 64 விழுக்காடு வீழ்ச்சி கண்ட விற்பனை தற்போது உயர்வைச் சந்தித்துவருகிறது.
பண்டிகை மற்றும் விழாக்காலம் என்பதாலும், பருமழை சிறப்பான விளைச்சலைத் தந்ததாலும் வரும் காலத்தில் தங்கத்தின் சில்லறை விற்பனை நல்ல உயர்வை சந்திக்கும் எனக் கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் சந்தைக்குப் புத்துயிர் அளித்த பண்டிகை மாதம்!