ETV Bharat / business

பணப்புழக்கத்தை உறுதி செய்ய மத்திய நிதியமைச்சர் நடவடிக்கை - பணப்புழக்கத்தை உறுதி செய்ய மத்திய நிதியமைச்சர் நடவடிக்கை

டெல்லி: அரசு மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அலுவலர்களிடம் பணப்புழக்கத்தை உறுதி செய்யுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Nirmala
Nirmala
author img

By

Published : Mar 28, 2020, 11:00 PM IST

கரோனா வைரஸ் நோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கான துறை மட்டும் தொடர்ந்து இயங்கிவருகிறது. இதனிடையே, அனைத்து மட்டத்திலும் பணப்புழக்கத்தை உறுதி செய்யுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கி அலுவலர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். பிறகு பேசிய அவர், "அரசு மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அலுவலர்களிடம் விரிவாக ஆலோசித்தேன். ஊரடங்கின்போது அவர்கள் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகள் எனக்கு ஊக்கம் அளித்தது" என்றார்.

எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், கோடாக் உள்ளிட்ட தனியார் வங்கிகளின் தலைமை அலுவலர்களிடம் ஊரடங்கின்போது ஏற்பட்ட சிரமம் குறித்து நிதியமைச்சர் கேட்டறிந்தார். நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா, "மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு பணப்புழக்கம் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது" என்றார்.

மேலும், கரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் கிளைகள், ஏடிஎம் மையங்களில் பின்பற்றப்படுகிறதா என்பதை வங்கிகள் உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா - சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.