ஒவ்வொரு நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையைப் பொருத்து, சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் மதிப்பீடுகளை அளிக்கும். சர்வதேச நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு கடன்களை அளிக்க இந்த மதிப்பீடுகளையே பெரிதும் நம்பியுள்ளன. இதனால் இந்த மதிப்பீடுகள் குறையாமல் அரசு கவனித்துக்கொள்ளும்.
இருப்பினும், தற்போது கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் பெருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. தற்போது, ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள தற்சார்பு இந்தியா என்ற பெயரில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இந்த ஊக்குவிப்பு திட்டம் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், சர்வதேச ரேட்டிங் நிறுவனமான ஃபிட்ச் நிறுவனம், foreign-currency issuer default rating (IDR) எனப்படும் இந்திய ரூபாயின் மதிப்பீட்டை 'நிலையானது' என்றதிலிருது 'நெகட்டிவ்' என்ற நிலைக்கு தரமிறக்கியுள்ளது.
இது குறித்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் ஐந்து விழுக்காடு வரை சுருங்கும். அதைத்தொடர்ந்து 2021-22ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 9.5 விழுக்காடு வரை வளர்ச்சியை காணும்.
கரோனா தொற்று இந்த ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சியை பலவீனப்படுத்தியுள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் மெதுவாகவே இருக்கும். கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருவதும் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மூடி ரேட்டிங் நிறுவனமும் இந்தியவின் மதிப்பீட்டை கடந்த 22 ஆண்டுகளில் இல்லத அளவுக்கு Baa2 (மோசம்) என்ற நிலைக்கு தரமிறக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அரசின் அடிப்படை ஆதரவு விலை விவசாயிகளுக்கு பலன் தருமா?'