மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார்.
சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த அவரது உரை மதியம் 1.40 மணிக்கு நிறைவடைந்தது. இதன்மூலம் இந்திய பட்ஜெட் வராலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரை என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்தார். இந்தாண்டு அதைவிட 23 நிமிடங்கள் அதிகம் வாசித்து, தனது பழைய சாதனையை முறியடித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "இது மிக நீண்ட பட்ஜெட்டாக இருக்கலாம். ஆனால், அதில் ஒன்றுமில்லை, அது ஒரு வெற்று உரை" என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020: பெண்கள் திருமண வயதை அதிகரிக்கும் விவகாரம் - குழு அமைக்க நடவடிக்கை!