ETV Bharat / business

வருமானவரிக் கணக்கு தாக்கல்: காலக்கெடு மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

டெல்லி: 2019-20 ஆண்டிற்கான வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Income Tax
Income Tax
author img

By

Published : Jul 5, 2020, 10:14 AM IST

கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு இடர்பாடுகள் உருவாகியுள்ள நிலையில், அது பொருளாதார நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு வருமானவரித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2019-20ஆம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு வரும் நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 31ஆம் தேதிவரை இருந்த காலக்கெடுவை தற்போது மேலும் நான்கு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

அதேபோல் ஆதார் எண்ணை பான்கார்டு எண்ணுடன் இணைக்கும் காலக்கெடுவையும் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: டிக் டாக் தடையால் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.