ETV Bharat / business

ஜியோ தவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிற இந்திய முதலீடுகள் என்னன்ன? - business news

ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 5.7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானான பங்குகளில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் குறித்து காண்போம்.

Mark Zuckerberg, Mukesh Ambani
Mark Zuckerberg, Mukesh Ambani
author img

By

Published : Apr 23, 2020, 9:32 AM IST

உலகின் மிகப்பெரும் சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் கடந்த வருடம் ஜூன் மாதம் முதன்முதலில் ’மீஷோ’ எனப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்தது. மீஷோ, தொழில் முனைவோர், குறிப்பாக பெண்கள், தங்கள் வணிகத்தை ஆன்லைன் மூலம் பெருக்கிக்கொள்ள உதவும் ஒரு தளம் ஆகும்.

ஃபேஸ்புக் நிறுவனம் மீஷோவில் முதலீடு செய்தத் தொகை குறித்து வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், 20 முதல் 30 மில்லியன் டாலர்கள்வரை முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியாவின் வளர்ந்துவரும் கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான ’அன்அகடமி’ க்கு நிதி அளித்தது. மேலும் மற்றொரு கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான ’பைஜூஸ்’ இல் ஃபேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான சான் ஜூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்வின் (CZI) பங்களிப்பு உள்ளது.

தற்போது ஜியோ தளங்களில் 5.7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் , இந்தியாவுடனான தங்கள் உறவை இது அடிக்கோடிட்டு காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் மேலும் முதலீடுகளை பெருக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், இந்தியா தங்களைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்த நாடு என்றும், கடந்து சென்ற வருடங்களிலும், தங்கள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு முதலீடுகள் செய்து மக்களை ஒன்றிணைத்து வணிகம் வளர உதவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கின் முக்கிய தளங்களான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பெரும்பான்மை பயனாளர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஃபேஸ்புக் ஒப்பந்தம் எதிரொலி; உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.