ETV Bharat / business

தொடர்ந்து ஐந்து மாதங்களாக சரியும் ஏற்றுமதி!

author img

By

Published : Aug 15, 2020, 12:12 PM IST

டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏற்றுமதி குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான ஏற்றுமதி 28.4 விழுக்காடு குறைந்துள்ளது.

தொடர்ந்து ஐந்து மாதங்களாக சரியும் ஏற்றுமதி!
தொடர்ந்து ஐந்து மாதங்களாக சரியும் ஏற்றுமதி!

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளும் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

உற்பத்தி குறைந்துள்ளதால் நாட்டின் ஏற்றுமதியும் கணிசமாக குறைந்துவருகின்றது. இந்நிலையில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, இந்தியாவில் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான ஏற்றுமதி 10.21 விழுக்காடு குறைந்து, 13.64 பில்லியன் டாலர்களாக உள்ளது. குறிப்பாக பெட்ரோலிய பொருள்கள், தோல் பொருள்கள், நகை உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளன.

கரோனா ஊரடங்கிற்கு பின் ஏற்றுமதி கணிசமாக குறைந்திருந்தது. இந்தியாவில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மாதம் 60.28 விழுக்காடும், மே மாதம் 36.47 விழுக்காடும், ஜூன் மாதம் 12.41 விழுக்காடும் ஏற்றுமதி குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் நாட்டின் இறக்குமதியும் 28.4 விழுக்காடு குறைந்து, 28.47 பில்லியான் டாலர்களாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 13.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை இந்தாண்டு ​​4.83 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

குறிப்பாக எண்ணெய் இறக்குமதி 31.97 விழுக்காடு குறைந்து 6.53 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. தங்க இறக்குமதி 4.17 சதவீதம் அதிகரித்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

பெட்ரோலிய பொருள்கள், தோல் பொருள்கள், ஜவுளிகளின் பொருள்கள், முந்திரி ஆகிய பொருள்களின் இறக்குமதி குறைந்துள்ளன. மறுபுறம் அரிசி, இரும்பு, எண்ணெய் விதைகள், இறைச்சி, பால் பொருள்கள், மருந்துகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில், ஏற்றுமதி 30.21 விழுக்காடு குறைந்து 74.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி 46.7 விழுக்காடு சரிந்து 88.91 பில்லியன் டாலராகவும் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை என்பது 13.95 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

அதேபோல இந்தக் காலகட்டத்தில் எண்ணெய் இறக்குமதியும் 55.88 விழுக்காடு குறைந்து 19.61 பில்லியன் டாலராக இருந்தது. எண்ணெய் அல்லாத இறக்குமதி 43.36 விழுக்காடு குறைந்து 69.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் பொருளார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதால், இந்தியாவில் வணிகம் மீளத் தொடங்விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு 57,128 கோடி உபரி நிதி வழங்க ஒப்புதல் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.