எரிவாயுவில் எத்தனால் கலப்பதால் உணவுப் பாதுகாப்பில் சிக்கல் ஏற்படுமா கேள்விக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் அரிசி, கோதுமை என்ற இரு பயிர்களைச் சார்ந்தே விவசாயிகள், தங்கள் முதலீடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தற்போது கரும்பில் முதலீடு செய்ய விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், எரிபொருளில் எத்தனால் கலப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தேவை குறைவும். இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
இந்தியா போன்ற இளைஞர்களை அதிகளவில் கொண்ட நாட்டில் உணவுக்கு இணையாக எரிபொருளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். உணவா எரிபொருளா என்று கேள்வி எழுப்பாமல், உணவும் எரிபொருளும் என்ற பார்வையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பணப்பற்றாக்குறை கொண்டிருந்த கரும்பு தொழிலுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.35,000 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டில் மேலும் ரூ.20,000 கோடி வழங்கி கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
எரிபொருளில் எத்தனால் கலப்பதால் நாட்டில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படாது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நிஜ வாழ்விலும் தலைவி' தேர்தலில் களமிறங்குகிறாரா கங்கனா ரனாவத்?