இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையை ஓலா நிறுவனம் குறிவைத்துள்ளது. இதற்காக, இந்தியாவில் ரூ.2,400 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைக்கிறது.
இந்நிலையில், முதற்கட்டமாக S 1, S1 Pro என இரு ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்தது.
இந்த வாகனங்களுக்கான புக்கிங் ஆரம்பித்துள்ள நிலையில், இரண்டே நாள்களில் ரூ.1,100 கோடிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஆகியுள்ளதாக ஓலா நிறுவனத்தின் துணைத் தலைவர் பவிஷ் அகர்வால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
புக்கிங் செய்த வாகனங்களின் டெலிவரி அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புக்கிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதிமுதல் புக்கிங் மீண்டும் தொடங்கவுள்ளது.
ஓலாவின் புதிய தொழிற்சாலை கட்டுமானம் முழுமைபெற்ற பின், ஆண்டுக்கு ஒரு கோடி வாகனம் தயாரிக்கும் திறனை அது பெற்றிருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: வாகன சந்தையில் புரட்சி ஏற்படுத்துமா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?