யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்குச் சொந்தமான மும்பை வீட்டில் நேற்றிரவு அமலாக்கத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். நிதி நெருக்கடியில் யெஸ் வங்கி சிக்கியுள்ள நிலையில், மும்பையிலுள்ள அதன் நிறுவனர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நிதி முறைகேட்டில் சிக்கிய டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனத்துடன் யெஸ் வங்கி தொடர்பில் இருந்துள்ளது. இதுவும் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த காரணமாகும்.
யெஸ் வங்கியின் நிதி நெருக்கடி காரணமான அதன் வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : யெஸ் வங்கி நிதி நெருக்கடி: கலக்கத்தில் பூரி ஜெகன்நாதர் கோயில் நிர்வாகம்!