ETV Bharat / business

பண மோசடி வழக்கு: நரேஷ் ஜெயினை கைது செய்த அமலாக்கத்துறை

டெல்லி: பண மோசடி வழக்கில் நரேஷ் ஜெயினை அமலாக்கத்துறை இயக்குநரகம் கைது செய்துள்ளது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை
author img

By

Published : Sep 3, 2020, 3:20 PM IST

போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நரேஷ் ஜெயின் என்பவரை அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலர்கள் கைது செய்துள்ளனர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தின் மூலம் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 554 போலி நிறுவனங்களின் 940 வங்கிக் கணக்குகளின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்த மோசடியில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. இரண்டு பண மோசடி வழக்குகளில், ஜெயின் மற்றும் அவரின் உதவியாளர்களை விசாரணை செய்துவருகிறோம்" என்றார்.

தவறான ஆவணங்களை தயாரித்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டதில் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொருளாதார குற்றப் பிரிவில் பதிவு செய்த வழக்கின் கீழ் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சீரழிவு - மத்திய அரசை சாடும் ராகுல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.