காங்கிரஸ் சார்பில் நடந்த பாரத் பச்சோ பேரணியில் ப. சிதம்பரம் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரம் முழுவதுமாக உடைந்து காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியப் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பொருளாதாரம் என்ற மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களில் உணவுப் பொருள் பணவீக்கம் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்ட செய்தி வருகிறது.
அடுத்த தினம் அதைவிட பயங்கரமான கெட்ட செய்தி வருகிறது. கடந்த ஆறு மாதத்தில் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரத்தை உடைத்துவிட்டார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை. இன்று ஒன்று நாளை ஒன்று என மாற்றி மாற்றி பேசுகிறார்.
பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறது என ஒருவர் பேசுவார். அடுத்தநாள் உலகப் பொருளாதாரம் சறுக்கல், மந்தநிலை எனக் கூறுவார். அவர் கொடுப்பதாகக் கூறும் பணம் அவரிடம் (அரசிடம்) இல்லை. இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் பாரத் பச்சோ பேரணியில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அஸ்ஸாமில் மோடி-அபே சந்திப்பு நடக்குமா? நீண்ட மவுனம் காக்கும் இந்திய வெளியுறவுத் துறை!