மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ”இணையதள வர்த்தகத்தில் அடியெடுத்து வைக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் புதிய இணையதளம் ஒன்றை உருவாகவுள்ளோம். பாரத் கிராஃப்ட்(Bharatcraft ) என்ற பேரில் உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் அமேசான், அலிபாபா வரிசையில் செயல்படும்.
இந்த பாரத் கிராஃப்ட்(Bharatcraft ), சேவைக்கு வந்தபிறகு இரண்டு, மூன்று வருடங்களுக்குள் 10 கோடி ரூபாய் வருவாய் அடைய முடியும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகமான MSME (Ministry of micro ,small and medium enterprises ) உற்பத்தி பிரிவில் 29 விழுக்காடும், ஏற்றுமதி பிரிவில் 50 விழுக்காடும் பங்களிக்கின்றன.
இதனை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய சேவை தொடங்கப்படுகிறது. இந்திய அரசாங்கம் தற்போது ஏற்றுமதியில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறது. இன்னும் ஐந்து வருடங்களுக்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகமமான MSME-ன் ஏற்றுமதி விகிதத்தை 50 விழுக்காடுகளாக மாற்ற வாய்ப்புள்ளது” என்றார்.