முகக்கவசங்கள், கைகளுக்குப் பயன்படுத்தும் கிருமி நாசினி ஆகியவற்றின் மூலப்பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துவருவதைக் கருத்தில்கொண்டு, அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்தது.
அதன்படி ஜூன் 30ஆம் தேதிவரை கைகளுக்குப் பயன்படுத்தும் கிருமி நாசினி அதிகபட்ச சில்லறை விலையை 200 மில்லி லிட்டருக்கு 100 ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியது.
கரோனா வைரஸ் தொற்று தினசரி அதிகரித்துக்கொண்டே செல்வதால், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்கள், கைகளுக்குப் பயன்படுத்தும் கிருமி நாசினி என அதிகமாக வாங்கிவருகின்றனர். இதனால் தட்டுப்பாடு அதிகரித்தது மட்டுமல்லாமல் அதன் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த டிஆர்டிஓ, தானே ஹேண்ட் சானிடைசரை உற்பத்திசெய்துள்ளது. அதன்படி 500 மில்லி ஹேண்ட் சானிடைசர் 14 ஆயிரத்து 398 பாட்டில்களை உற்பத்திசெய்துள்ளது.
இதையும் படிங்க: 200 மி.லி. சானிடைசருக்கு அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.100 நிர்ணயம்!