நேற்று வெளியான தகவலின்படி, நிறுவனத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப். ஈடுபட்டுள்ளது.
அதன்படி, வருவாயை அதிகரிக்கும் நோக்கில் 'நான் கன்வெர்ட்டிபிள் டிபென்டர்ஸ்' (non-convertible debentures) என்று அழைக்கப்படும் கடன் பத்திரத்தைப் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளது.
இந்தக் கடன் பத்திரம் மூலம், பொதுமக்கள் நேரடியாக டி.எல்.எஃப். நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான வட்டி விகிதம் வழங்கப்படும்.
இதுவரை எந்த ஒரு நிறுவனமும் வழங்காத அளவிற்கு, வட்டி விகிதம் வழங்குவதே இந்த 'நான் கன்வெர்ட்டிபிள் டிபென்டரஸ்' திட்டம் ஆகும்.
பொதுமக்களிடம் இந்தத் திட்டத்தைக் கொண்டுசென்று 1,000 கோடி ரூபாய் வருவாய் அதிகரிக்கவுள்ளோம் என டி.எல்.எஃப் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 23.81 சதவிகிதம் அதிகரித்து 414.10 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 335.15 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யெஸ் வங்கி நிர்வாகத்தைக் கையிலெடுத்த ரிசர்வ் வங்கி