ETV Bharat / business

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 9 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் - கிரிசில் அமைப்பு தகவல் - இந்தியா ஜிடிபி 9 விழுக்காடு சரிவு கிரிசில்

இந்தியாவின் பொருளாதாரம் 2020-21ஆம் நிதியாண்டில் ஒன்பது விழுக்காடு குறையும் என கிரிசில் (CRISIL) அமைப்பு தெரிவித்துள்ளது.

Crisil
Crisil
author img

By

Published : Sep 10, 2020, 8:21 PM IST

நாட்டின் முன்னணி பொருளாதார கணிப்பு நிறுவனமான கிரிசில் (Credit Rating Information Services of India Limited) இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காடு வீழ்ச்சியைச் சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளது.

1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா சந்திக்கும் மாபெரும் பொருளாதார சரிவு இதுவே என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மே மாதம் கிரிசில் வெளியிட்டுள்ள கணிப்பில் பொருளாதார வளர்ச்சி ஐந்து விழுக்காடு அளவில்தான் குறையும் எனத் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், ஜூன் காலாண்டின்போது ஜி.டி.பி. குறியீடு 23.9 விழுக்காடு சரிவைச் சந்தித்தது.

எனவே, தனது மதிப்பீட்டை மேலும் குறைத்து வீழ்ச்சி அதிகமாக இருக்கும் என கிரிசில் தெரிவித்துள்ளது. கரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் முடக்கம் கண்டுள்ள நிலையில், அரசு போதுமான நேரடி நிதி சலுகை வழங்கவில்லை, இதுவே பெரும் சரிவுக்கான காரணம் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.