கரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றாட வர்த்தகப் பணிகள் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது.
முதற்கட்ட ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆன்லைன் வர்த்தகம் அனுமதிக்கப்பட்டது. இதன் தாக்கமாக இந்தியாவில் ஆன்லைன் வார்த்தகங்கள் பெரும் உயர்வைச் சந்தித்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், லாக்டவுனுக்குப் பிந்தைய காலத்தில் இந்தியர்கள் ஆன்லைன் வர்த்தக நடவடிக்கையை அதிகமாக மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக கடந்தாண்டை ஒப்பிடும்போது ஆன்லைன் வர்த்தகம் 54 விழுக்காடு அதிகரித்து சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளது. லாக்டவுன் தளர்வின்போது முதலில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து சில காலத்திற்குப் பின்னர் மற்ற பொருட்களும் ஆன்லைன் விற்பனைக்கு வந்தது. அப்போது 36 விழுக்காடு கூடுதல் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு நீங்கும் வரை தகுந்த இடைவெளி தேவை உள்ளதால், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடவே விரும்புவார்கள். எனவே, ஆன்லைன் வார்த்தகம் மேலும் வளர்ச்சிதரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை தோற்கடிக்க ஒரே வழிதான்!