கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது பணியாளர்களில் 10 விழுக்காட்டினரை பணிநீக்கம் செய்வதாக திங்களன்று (ஜூலை20) அறிவித்துள்ளது.
இது குறித்து இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா கூறுகையில், “சாத்தியமான அனைத்து தரப்புகளையும் கவனமாக மதிப்பிட்டு மதிப்பாய்வு செய்த பின்னர், எங்கள் பணியாளர்களில் 10 விழுக்காட்டினரை நீக்குவது என்ற என்ற முயற்சிக்கு வந்துள்ளோம்.
இது உண்மையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் நாம் உருவாக்கியிருந்த நம்பிக்கையான வளர்ச்சிப் பாதையிலிருந்து நிகழ்ந்த நிகழ்வுகளின் துரதிர்ஷ்டவசமான திருப்பமாகும். இந்த தொற்றுநோய் எங்களது சிறந்த திட்டங்களை மறு மதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.
எங்கள் ஊழியர்களுக்கு தொற்றுநோயைக் குறைப்பது மிகவும் முக்கியமானது, உண்மையில் உலகளவில் ஒரு சில விமான நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்றாகும்.
இது வணிக முடக்கம் அமலில் இருந்தபோதிலும், 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு முழு சம்பளத்தை நிறுவனம் வழங்கியது. அதன்பிறகு, சம்பளக் குறைப்பு, ஊதியம் இல்லாமல் விடுப்பு மற்றும் வேறு பல செலவுகள் குறைப்பு போன்ற பல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் இந்த செலவினங்கள் குறைப்பு, வருவாயின் வீழ்ச்சியை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. மேலும் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்கு உதவ பராமரிப்பு தொகுப்பு ஒன்றை வழங்குகிறோம். அதன்படி அவர்களுக்கு மூன்று மாத சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். அவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால், அவர்களுக்கு விமான டிக்கெட்டும் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: அட்டகாசமான வசதிகளுடன் வெளியான ரெட்மி நோட் 9!