உலகளவில் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால், கச்சா எண்ணெய்யின் தேவை பலமடங்கு குறைந்து அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது. இதன் காரணமாக, ப்ரெண்ட் பெல் என்ற கச்சா எண்ணெய் கடும் சரிவை சந்தித்துள்ளது.
ஒரே மாதத்தில் ஒன்பது விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளதாகவும், 2017ஆம் ஆண்டுக்கு பின்பு இப்போது தான் கடுமையான சரிவை சந்திப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய்க்கான உலகளாவிய அளவுகோல், பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 45 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்து வெறும் 41 அமெரிக்க டாலருகே விற்பனையானது என கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துவருகின்றன.
இதையும் படிங்க: யெஸ் வங்கி வைப்புத் தொகையாளர்களின் நலனைக் காப்பது உறுதி - நிர்மலா சீதாராமன்