ETV Bharat / business

பருப்பு, சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு! - விலை உயர்வு

சென்னை: பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

hike
hike
author img

By

Published : Sep 25, 2020, 11:44 AM IST

ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 95 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உளுத்தம் பருப்பு 110 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், கடலைப் பருப்பு 65 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும், பாசிப்பருப்பு 100 ரூபாயிலிருந்து 110 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல், மல்லி, மிளகாய் வற்றல் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து முறையே 100 ரூபாய்க்கும், 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. முதல் தர புளியின் விலை 160 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. சம்பா ரவை கிலோ 84 ரூபாயிலிருந்து 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 105 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், பாமாயில் 84 ரூபாயிலிருந்து 92 ரூபாயாகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், செக்கு எண்ணெய் வகைகளின் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் உள்ளது.

விலை உயர்வால் வியாபாரம் மந்தமாகவே நடைபெறுகிறது

கரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட முதல் ஊரடங்கு காலத்தில், மக்கள் பீதியில் அதிக பொருள்கள் வாங்கியது, சரக்கு போக்குவரத்து தடைபட்டது ஆகியவற்றால் மளிகை பொருள்களின் விலை சற்று அதிகரித்து பின்னர் குறைந்ததாகவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர் மளிகை கடை வணிகர்கள். விலை ய்யர்வு, பணப்புழக்கம் இல்லாதது ஆகிய காரணங்களால் வியாபாரம் மந்தமாகவே நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதிகளவிலான பருப்பு வகைகள் வட மாநிலங்களில் இருந்தே இங்கு கொண்டு வரப்படுகின்றன. டீசல் விலை உயர்வு, நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்கான காரணம் என்கின்றனர் வியாபாரிகள். இந்த விலை ஏற்றத்தால் மாத செலவில் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் எண்ணெய் விலை மட்டும் மூன்று முறை அதிகரித்துள்ளது என்றும், புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுவதாகவும் அவர்கள் குறை கூறுகின்றனர்.

பருப்பு, சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு!

ஊரடங்கால் பொருளாதார நிலை மிகவும் பாதித்துள்ள நடுத்தர குடும்பங்களுக்கு, இந்த அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மேலும் நெருக்கடியையே கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.