ஜிஎஸ்டி
பல்வேறு மறைமுக வரிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரியானது 5, 12, 18 மற்றும் 28 ஆகிய நான்கு நிலைகளில் விதிக்கப்படுகின்றது.
ஜிஎஸ்டி கவுன்சில்
மத்திய, மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவர்கள் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியைதேவைகளுக்கு ஏற்றவாறு குறைத்தும் அதிகரித்தும் மாற்றங்கள் செய்து வருகிறது. ஆனால் பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டாலும் அந்த பலன்களை சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருவதில்லை. இதுபோன்ற விவகாரங்களை Anti-profiteering authority என்றழைக்கப்படும் அமைப்பு கண்காணித்து வருகிறது.
புதிய விளக்கம்
குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி பலன்களை நிறுவனங்கள் விலையை குறைக்க வேண்டும் என கட்டாயம் கிடையாது, அதற்கு மாற்றாக பொருட்களின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம் என அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது. ஆனால் இந்த அளவு அதிகரிப்பு ஜிஎஸ்டி வரி பலனுக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.