கடந்த சில வாரங்களுக்கு முன் சீனச் செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அந்நாட்டுச் செயலிகளைத் தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு உளவுத் துறை பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு தடை விதித்து இந்திய அரசு நேற்று (29-06-2020) உத்தரவிட்டது.
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராகவும், 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் செயல்படுவதாலும் இந்தச் செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கான இந்தியாவின் மாற்று செயலி என்று விளம்பரப்படுத்தப்பட்ட ’சிங்காரி’ செயலியை, நேற்றிரவு வெறும் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலி முதன்முதலில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிடப்பட்டது. அப்போது யாரும் இந்த செயலியை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், தற்போது டிக்டாக் தடை செய்யப்பட்டதால், ஒரே இரவில் சிங்காரி செயலி டிரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. இந்த சிங்காரி செயலி பெங்களூருவைச் சேர்ந்த பிஸ்வத்மா நாயக், சித்தார்த் கவுதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்தச் செயலி இந்தி, தமிழ், வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
1 million video views per 30 mins @Chingari_IN #chingari pic.twitter.com/OJ9VJynIrq
— Sumit Ghosh (@sumitgh85) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1 million video views per 30 mins @Chingari_IN #chingari pic.twitter.com/OJ9VJynIrq
— Sumit Ghosh (@sumitgh85) June 30, 20201 million video views per 30 mins @Chingari_IN #chingari pic.twitter.com/OJ9VJynIrq
— Sumit Ghosh (@sumitgh85) June 30, 2020
இது குறித்து செயலியை உருவாக்கிய பிஸ்வத்மா நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்போது நாங்கள் எதிர்பார்த்ததைவிட எங்கள் செயலியை அதிகம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் பலரும் எங்கள் செயலியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். எந்த மாதிரியான முதலீடுகளைப் பெறலாம் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய மஹேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா, "நான் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ததில்லை. ஆனால், இப்போதுதான் சிங்காரி செயலியை பதிவிறக்கம் செய்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இந்திய விவரங்களைப் பகிர்ந்ததில்லை; பகிரப்போவதுமில்லை' - செயல்பட அனுமதி கோரும் டிக்டாக்!