மத்திய அரசு அண்மையில் பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. அதன்படி, விவசாயக் கடன் பெற்றுள்ள, புதிதாகப் பெறப்போகும் விவசாயிகள் பயிர் காப்பீடு அவசியம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்து அவர், 'பல தவறான முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்துவரும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு விரோதமான முடிவை எடுத்துள்ளது. கட்டாய பயிர் காப்பீடு என்பது முட்டாள்தனமான முடிவாகும். புது திட்டம் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் உள்ளது' எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் கொள்கை முடிவு தெளிவற்றது என இது போன்ற முடிவுகள் காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே பொருளாதார ரீதியாக நலிவுற்ற விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்றும்விதமாக மத்திய அரசு செயல்பட்டுவருவதாக சிதம்பரம் கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: 'கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கியதில் எனக்குப் பெருமை' - முனைவர் கதிரேசன்