நாட்டின் அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய உடனடி தடை விதிக்கப்படுவதாக, பொது வெளியுறவு வர்த்தக இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, பெங்களூரு ரோஸ் வகை தொடங்கி கிருஷ்ணாபுரம் வகை வெங்காயம் வரை அனைத்து வகை இந்திய வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மொத்தச் சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு ஏற்பட்டதையடுத்து, அரசு இந்த புதிய தடை உத்தரவை விதித்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை உயர்வு மக்களுக்கு சுமையாக மட்டுமல்லாது, அரசின் மீது பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தும். அத்துடன் பிகார் தேர்தல், பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி நிலுவைக்கான கடன் வசதி; 13 மாநிலங்கள் ஒப்புதல்!