2021-22 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. கோவிட்-19 தாக்கத்திற்குப் பின்னர் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டையை பல்வேறு தரப்பினரும் அதீத எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, கரோனாவால் கடும் பாதிப்பைச் சந்தித்த தொழில்துறைக்கு பல சலுகைகள் வழங்கப்படும் நிலையில் பொது மக்களுக்கும், வரி செலுத்துவோருக்கும், சம்பளம் பெறும் தனிநபர்களுக்கும் வரி சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
விக்ரம் விஜயராகவன், மெட்ராஸ் வர்த்தக சபை
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மெட்ராஸ் வர்த்தக சபையின் வரித்துறை இணைத் தலைவர் விக்ரம் விஜயராகவன், "வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் கையில் அதிக பணம் தங்கும், சந்தையில் நுகர்வு அதிகரிக்கும்.
நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் அரசு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும். உதாரணமாக கார் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வரி விலக்கு அளிக்காலம். அந்த வகையில், தனி நபர்கள், தொழில்துறை, அதனை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.
கரோனா தொடர்பான அரசின் சேவைகளுக்கு நிதி திரட்டும் வகையில் வரிச் சலுகையுடன் கூடிய கரோனா பாண்டுகளை வெளியிடலாம். அதே சமயம், அரசின் வரி வருவாய் முக்கியம், இதனால் அதிக அளவில் வரிச் சலுகைகள் வழங்கினால் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது" என்றார்.
ஸ்ரீராம், ஐ.டி. ஊழியர்
சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தின் பணியாற்றும் ஸ்ரீராம் பேசுகையில், "வருமான வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும். அப்படி குறைக்கப்படாவிட்டாலும், 80சி பிரிவில் முதலீடுகளின் வழங்கப்படும் வருமான வரி விலக்கை அதிகரிக்க வேண்டும்.
தற்போது 1,500 -1000 ரூபாய் வரை முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரியிலிந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓய்வூதியத்துக்கு செலுத்தும் தொகைக்கு வழங்கப்படும் வருவமான வரி விலக்கையும் அதிகரிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2021-22! - காத்திருக்கும் திருப்பூர்!