ETV Bharat / business

பட்ஜெட் 2021-22: பெரும் பாதிப்பைச் சந்தித்த சுற்றுலாத் துறைக்கு ஏமாற்றம்? - மத்திய பட்ஜெட் 2021-22 செய்திகள்

கோவிட்-19 காரணமாக பெரும் பாதிப்பைச் சந்தித்த சுற்றுலாத் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் தனிப்பட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமே என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாத்துறை
சுற்றுலாத்துறை
author img

By

Published : Feb 2, 2021, 7:42 AM IST

கோவிட்-19 முடக்கம் காரணமாக உலகளவில் சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இந்தியாவில் பெருந்தொற்று குறைந்து காணப்படுவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் துறை நிதிநிலை அறிக்கையை பெருமளவில் எதிர்பார்த்து இருந்தது.

இந்நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்து, இந்திய சுற்றுலாத் துறை கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், சுற்றுலாத் துறை வல்லுநருமான சுபாஷ் கோயல் ஈடிவி பாரத்திடம் தனது பிரத்யேக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதில் சுற்றுலாத் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், மத்திய அரசிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தோம். சுற்றுலாத் துறையை நம்பி மூன்று கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் நேரடிப் பலன்கள் ஏதுமில்லை.

கோவிட்-19 தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும். அத்துடன் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் மறைமுகமாகச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும். இருப்பினும் நேரடிப் பலன்கள் இல்லாதது ஏமாற்றமே எனக் கூறினார்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2021-22: தூய்மை இந்தியா 2.0 திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.