2020-21ஆம் நிதியாண்டில் மத்திய அரசு தனக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்று, சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி மத்திய அரசு, தனது ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சுமார் 47,430 கோடி ரூபாய் மதிப்பிலான 52.29 விழுக்காடு பங்குகள் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைப் பிரிவு, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டரில், "பாரத் பெட்ரோலியத்தின் பங்கு விலக்கல் (disinvestment) தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலர் இந்நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதைத் தொடர்ந்து இது தற்போது இரண்டாம் கட்டத்திற்கு நகர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
-
Strategic disinvestment of BPCL progresses: Now moves to the second stage after multiple expressions of interest have been received. @PIB_India @FinMinIndia https://t.co/bDNx6gw3d2
— Nirmala Sitharaman (@nsitharaman) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Strategic disinvestment of BPCL progresses: Now moves to the second stage after multiple expressions of interest have been received. @PIB_India @FinMinIndia https://t.co/bDNx6gw3d2
— Nirmala Sitharaman (@nsitharaman) November 16, 2020Strategic disinvestment of BPCL progresses: Now moves to the second stage after multiple expressions of interest have been received. @PIB_India @FinMinIndia https://t.co/bDNx6gw3d2
— Nirmala Sitharaman (@nsitharaman) November 16, 2020
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பாரத் பெட்ரோலியம், இந்திய கப்பல் கழகம், இந்திய கொள்கலன் கழகம் உள்ளிட்ட ஐந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விலக்கலை மேற்கொள்ள அனுமதியளித்திருந்தது.
இதையும் படிங்க: சரிபாதியாக குறைந்த தங்கத்தின் இறக்குமதி!