இது குறித்து பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்தியாவின் செயல் தலைவர் அர்லிண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியின் கீழ், வாடிக்கையாளர்கள் வாகன விற்பனைக்குப் பின் விரிவான சேவைகளைப் பெறமுடியும். இதனால், அனைத்து நேரங்களிலும் வாகனங்களின் மின் செயல்பாடு, சாலைக்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.
பிஎம்டபிள்யூ விரிவாக்கப்பட்ட சர்வீஸ் சேவை எல்லா நேரங்களிலும் அனைத்து வகையான வாகன பாதுகாப்பையும் வாடிக்கையாளர்களின் கார்களின் மொத்த தயார் நிலையையும் உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 33 சர்வீஸ் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கார் சர்வீஸ் செய்யப்பட்டு சுத்தகரித்து எங்கள் வாடிக்கையாளர் சேவை அலுவலர் உங்கள் வீட்டிற்கே காரை டெலிவிரி கொடுப்பார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பிஎம்டபிள்யூ காரை திருடி கொலைக்குப் பயன்படுத்திய பிரபல திருடன் போலீசில் சிக்கினான்!