கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்துத் துறைகளும் மந்தமாகச் செயல்பட்டுவருகின்றன. அதில் ரியல் எஸ்டேட் துறையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நீண்ட நாள் வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு பணம் சேர்த்தவர்களுக்கு கரோனா பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வருமானம் இல்லாததால் சேமித்த பணத்தைச் செலவளித்து வீடு கட்டவோ, வாங்கவோ முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அனேக பேரின் கனவு நனவாகமல் கனவாகவே தேங்கி நிற்கின்றன.
இத்தகைய சூழலில் ஆத்மநிர்பார் பாரத் 3.0 திட்டத்தை (பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்) இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த அறிவிப்பில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாக சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.
அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:
- வீடு விற்பனையை அதிகரிக்கும் வகையில் சர்கிள் ரேட் , பத்திர விலைக்கு இடையேயான விலை வரம்பை 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு வரை அதிகரிக்கப்படும்.
- இதன்மூலம் விற்காமல் இருக்கும் வீடுகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான விலைக்கு வீடுகளை விற்க முடியும்.
- 2 கோடி ரூபாய் வரை வீடு வாங்குவோருக்கு அதிகமான வருமான வரிச் சலுகை கிடைக்கும்.
- இந்தச் சலுகை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.
இதையும் படிங்க: மினுமினுக்க தொடங்கும் தீபாவளி!