டெல்லி: ஆக்ஸிஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் புதன்கிழமை (ஜன.27) வெளியாகின. 2020 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 36.4 சதவீதம் வரை சரிவு கண்டுள்ளது.
தற்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,116.60 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.1,757 கோடியாக இருந்தது. இதேபோல் வங்கியின் செயல்படாத சொத்துகள் 5 சதவீதத்திலிருந்து 3.44 சதவீதமாக தளர்த்தப்பட்டுள்ளன.
நிகர செயல்படாத சொத்துகள் 0.74 சதவீதம் அதிகரித்துள்ளன. மொத்த செயல்படாத சொத்துகள் ரூ.30,609.83 கோடியிலிருந்து ரூ.21,997.90 ஆக குறைந்துள்ளன. தொடர்ந்து, நிகர வாராக்கடன்கள் ரூ.12,160.28 கோடியிலிருந்து ரூ.4,609.83 கோடியாக குறைந்துள்ளன.
ஒதுக்கீடுகள் (வரி தவிர) ரூ.4,604.28 கோடியாக அதிகரித்துள்ளன. கடந்தாண்டு இதே காலாண்டில் ஒதுக்கீடுகள் ரூ.3,470.92 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிரந்தர வைப்புநிதித் திட்டத்தில் முக்கிய மாற்றம் -ஆக்சிஸ் வங்கி