ETV Bharat / business

நிரந்தர வைப்புநிதித் திட்டத்தில் முக்கிய மாற்றம் -ஆக்சிஸ் வங்கி - ஆக்ஸிஸ் வங்கி நிரந்தர வைப்பு நிதி பெனால்டி தள்ளுபடி

நிரந்தர வைப்புநிதி கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்தை மெச்சூரிட்டி காலத்திற்கு முன்னதாக எடுத்தால் இனி அபராதம் செலுத்த வேண்டியதில்லை என ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.

Axis Bank
Axis Bank
author img

By

Published : Jan 11, 2021, 4:34 PM IST

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்டகால சேமிப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர வைப்புநிதித் திட்டத்தில் (Fixed Deposit) புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

அதன்படி இரண்டாண்டுகள் அதற்கும் மேலான காலத்திற்கு நிரந்தர வைப்புநிதி வைத்திருப்பவர்கள், தேவைக்காக 15 மாத காலத்திற்குப் பின் முன்னதாகவே எடுக்கும்பட்சத்தில் அபராதம் இல்லை என அறிவித்துள்ளது. இந்தச் சலுகை தொடர் வைப்புக்கணக்கு (Recurring Deposit) சேமிப்புத் திட்டத்திற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், தற்காலச் சூழலைக் கருதியும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வைப்புத்தொகையின் மூலப் பணத்திலிருந்து 25 விழுக்காடு அதற்கு குறைவான தொகையை அவசரத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிசம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.