இந்தியாவில் கோவிட்-19 பரவலுக்கு முன்னரே இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துவந்தன. விற்பனை இல்லாததால் டிவிஎஸ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேலையில்லா நாள்களை கடைப்பிடித்துவந்தன.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் உள்ளிட்ட அனைத்து தொழில்துறைகளும் முற்றிலும் முடங்கியுள்ளன.
இந்நிலையில் மாருதி நிறுவனம் அரசுக்குத் தாக்கல்செய்துள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம் உள்நாட்டுச் சாந்தையில் ஒறு வாகனம்கூட விற்பனை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மாருதி நிறுவன வரலாற்றிலேயே உள்நாட்டுச் சந்தையில் ஒரு வாகனம்கூட விற்பனைசெய்யாமல் இருப்பது இதுவே முதன்முறை.
அரசின் உத்தரவு காரணமாக அனைத்து உற்பத்தி, விற்பனை இடங்கள் மூடப்பட்டுள்ளதே இதன் காரணம் என்று மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஏப்ரல் மாதம் 632 வாகனங்களை மாருதி நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
முன்னதாக மார்ச் மாதம் மாருதி நிறுவனத்தின் விற்பனை 47.9 விழுக்காடு குறைந்து 76,976ஆக இருந்தது.
இதையும் படிங்க: கரோனாவால் அமேசான் லாபம் பெரும் சரிவு!