ETV Bharat / business

ஒரே மாத்தில் மூன்றாவது முறையாக விலை ஏற்றத்தைச் சந்தித்த விமான எரிபொருள்

டெல்லி: பல்வேறு நாடுகளும் ஊரடங்கில் இருந்து திரும்பிவருவதால் விமான எரிபொருளின் விலை ஒரே மாத்தில் மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளது.

ATF price
ATF price
author img

By

Published : Jul 1, 2020, 7:12 PM IST

உலகின் பல்வேறு நாடுகளிலும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக விமான எரிபொருளின் தேவையும் கணிசமாக குறைந்தது. அதன்படி, டெல்லியில் கடந்த மே மாதம் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் 22,544.75 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதேபோல, உலகின் பல்வேறு நாடுகளிலும் விமான சேவை என்பது படிப்படியாக அதிகரிக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

அதன்படி, டெல்லியில் விமான எரிபொருள்களின் விலை ஒரே மாத்தில் மூன்றாவது முறையாக தற்போது உயர்த்துப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.2,922.94 (1.48 விழுக்காடு) உயர்த்தப்பட்டு 41,992.81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜூன் 1ஆம் தேதி விமான எரிபொருள்களின் விலை 12,126 ரூபாயும் (56.6 விழுக்காடு), அதைத்தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதி 5,495.5 ரூபாயும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையும் டெல்லியில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ளூர் மதிப்பு கூட்டு வரியை பொறுத்து நான்கு ரூபாய் வரை மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

இதுதவிர, தொடர்ந்து 22 நாள்களாக விலை உயர்வை சந்தித்துவந்த பெட்ரோல் டீசலின் விலை இரண்டாவது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.43 ரூபாய்க்கும், டீசல் 80.53 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கோவிட் - 19 காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வழிமுறைகள் - ஒருபார்வை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.