இந்தியாவில் நடைபெறும் அனைத்து சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் உள்ளது. கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காகவே ஹாட்ஸ்டாருக்கு சந்தா கட்டுபவர்கள் இங்கு ஏராளம்.
இந்நிலையில், ஹோட்ஸ்டார் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் சேவையை தொடங்கவுள்ளது.
இதற்காக நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் அனைத்து சர்வதே கிரிக்கெட் போட்டிகளையும் இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை அமேசான் ப்ரைம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2020-21 சீசனில் தொடங்கி 2025-26 சீசன் வரை நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளை அமேசான் ப்ரைம் இந்தியாவில் ஒளிபரப்பும்.
அதன்படி, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முறையும் பிற்பகுதியில் ஒரு முறையும் நியூசிலாந்து செல்லும் இந்தியாவின் தொடர் அமேசானில் ஒளிபரப்பப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அமேசானின் வாடிக்கையாளர்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெரும் முதலீட்டுடன் தெலங்கானாவில் கால்பதிக்கும் அமேசான் வெப் சர்வீசஸ்!