சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுடன் இயர்போன், வாட்ச் போன்றவற்றை உள்ளடக்கிய Wearable பிரிவு, ஆண்டுதோறும் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 35.1 விழுக்காடு சந்தை மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் Wearable பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து எம்ஐ நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தக் காலாண்டில் எம்ஐ நிறுவனம் Wearable பிரிவில் 1.7 கோடி சாதனங்களை விற்பனை செய்துள்ளது. அவற்றில் சுமார் 1.28 கோடி சாதனங்கள் ஃபிட்னஸ் டிராகராகும்.
அதேபோல், ஹவாய் நிறுவனம் சுமார் 1.37 கோடி சாதனங்களை விற்று, மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் Wearable சாதனங்களின் விற்பனை சர்வதேச அளவில் 35.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இது குறித்து ஐடிசி மொபைல் சாதனக் கண்காணிப்பாளர்களின் ஆராய்ச்சி மேலாளர் ஜிதேஷ் உப்ரானி, "மூன்றாம் காலாண்டில் பல நாடுகளும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. இதனால் தேவை அதிகரித்து விற்பனை அதிகரித்துள்ளது.
மேலும், இந்தப் பிரிவில் அனைத்து விலைகளிலும் பொருள்கள் இருப்பதால் அனைவராலும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க முடிகிறது" என்றார்.
Wearable பிரிவில் 84 லட்சம் சாதனங்களின் விற்பனையுடன் சாம்சங் மூன்றாவது இடத்திலும், ஃபிட்பிட் (Fitbit) நான்காவது இடத்திலும் உள்ளன. இந்திய சந்தையை மட்டும் குறிவைத்து இயங்கும் போட் (BoAt) நிறுவனம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: யாருக்கு? எப்போது? எப்படி? - ஃபைஸரின் கரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து தகவல்கள்