கடந்த சில வாரங்களாகவே பல அதிரடி கருத்துகளை வெளியிட்டுவருவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் விமானம் பயணம் மேற்கொண்டபோது, பயணிகள் பலரும் இவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். இது தொடர்பான வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாயின.
விமானத்தில் நடிகை கங்னா ராணவத்துடன் பலரும் செல்ஃபி எடுத்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, விமானங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், இது குறித்து விளக்கமளிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. பல முறை விமானப் பணிப்பெண்கள் அறிவுறுத்தியும் பயணிகள் யாரும் அதை கேட்கவில்லை என்று இண்டிகோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானங்களில் முறையான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய முடியாத விமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "ஏற்கனவே இந்த விதிமுறைகள் இருந்தாலும், இதை அமல்படுத்த சில விமான நிறுவனங்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, விமானங்களில் முறையான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய முடியாத விமான நிறுவனங்கள் செயல்பட இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் தொழில்துறை உற்பத்தி 10.4 விழுக்காடு சரிவு