மலேசியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானமான ஏர் ஆசியா கடந்த சில மாதங்களாக எரிபொருள் நிறுவனங்களுக்குத் தர வேண்டிய நிலுவைத்தொகையை சரியாக வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மூன்று நிறுவனங்கள் ஏர் ஆசியா நிறுவனத்துக்கு எரிபொருட்கள் வழங்குவதைத் தடை செய்தனர். குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian oil corporation), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat petroleum corporation limited ) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corp Ltd ) ஆகிய மூன்று நிறுவனங்களும் தான் ஏர் ஆசியா நிறுவனத்துக்கு எரிபொருள் தரமறுத்திருக்கிறது என தெரியவந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கடன்காலமாக தொண்ணூறு நாட்களுக்கு ஒரு முறைதான் எரிபொருட்களுக்கான பணத்தை விமானநிறுவனங்கள் செலுத்துகின்றன. இந்நிலையில் 200 நாட்களைக் கடந்து பணம் செலுத்தாததால் கோபம் அடைந்த இந்த மூன்று நிறுனவங்களும் நேற்று மாலை நான்கு மணி அளவில் எரிபொருள் தருவதை நிறுத்திவிட்டனர்.
இதுவரை 4500 கோடி ரூபாய் கடனை அடைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ள எரிபொருள் நிறுவனங்களுக்கு, வெறும் 60 கோடி ரூபாயை ஏர் ஆசியா தருவதாகக் கூறியதே எரிபொருள் நிறுவனங்களின் உச்சபட்ச கோபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.