நடப்பு காலாண்டிற்கான நேரடி வரிவருவாய் குறித்த விவரங்களை வருமான வரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு காலாண்டில் நாட்டின் நேரடி வரிவருவாய் 1.37 லட்சம் கோடியாக உள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டு ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் நடப்பு காலாண்டில் நேரடி வரிவருவாய் 31 விழுக்காடு குறைந்துள்ளது.
கரோனா லாக்டவுன் காரணமாக நடப்பு காலாண்டின் இரண்டு மாதங்கள் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிய நிலையில், இந்த வரி வருவாயில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின் லாக்டவுனில் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த காலாண்டில் வரிவருவாயில் முன்னேற்றம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: '25% பங்குகள் விற்பனை' - இலக்கை நோக்கி நகரும் ஜியோ