கரோனா வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி, ஏசியன் டெவலப்மென்ட் வங்கி முடிவுசெய்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த நிலையில், பாகிஸ்தானை தேர்வுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 238 மில்லியன் டாலர் உலக வங்கியும், 350 மில்லியன் டாலர் ஏசியன் டெவலப்மென்ட் வங்கியும் பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளது. பாகிஸ்தான் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: முகக்கவசம், வென்ட்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை