கரோனா பாதிப்பை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார சக்திகளான ஜி20 நாடுகள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு பொதுநிதி ஒன்றை பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளன.
இதேபோல் பின்தங்கிய நாடுகளின் மருத்துவ தேவைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உதவிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றால் ஆசிய நாடுகள் ஆக்கப்பூர்வமாக செயல்படும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி பிரத்யேக கோவிட்-19 நிதியைை தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பெரும் தொகையாக சுமார் ரூ.11,387 கோடியை இந்தியா பெறுகிறது. இது குறித்து ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் மசாட்சுகு அசகாவா, இந்தியாவில் சுமார் 80 கோடி அடித்தட்டு மக்கள் பொருளாதர ரீதியாக கடும் பாதிப்பைச் சந்துள்ளனர். இந்தச் சூழலில் ஆசிய வளர்ச்சி வங்கி அரசின் அவசரகாலத் தேவையை உணர்ந்து இந்த நிதியை ஒதுக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை கரோனா நோய் தொற்று காரணமாக 29 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 939 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விரைவில் 5ஜி சேவை: நோக்கியாவுடன் ஒப்பந்தம் செய்த ஏர்டெல்!