ETV Bharat / business

ஜோர்டானில் நடைபெறும் உலக பொருளாதார கூட்டமைப்பின் கூட்டம்!

அமான்: 50 நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் 17வது உலக பொருளாதாரக் கூட்டமைப்பின் கூட்டம் ஜோர்டானில் தொடங்கியது.

WEF
author img

By

Published : Apr 7, 2019, 7:26 PM IST

உலக பொருளாதாரக் கூட்டமைப்பு என்பது, உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் தொழிற்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தன்னாட்சி அமைப்பாகும். 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களுக்கான கூட்டம் ஜோர்டான் தலைநகர் அம்மானில் நேற்றுத் தொடங்கியதுள்ளது.

17th WEF Meet
17வது உலக பொருளாதாரக் கூட்டமைப்பின் கூட்டம்

இதை ஜோர்டான் நாட்டு மன்னர் ஓமர் அப்துல்லா தொடங்கிவைத்தார். இதில் ஐ.நா தலைவர் ஆன்டோனியோ குவிட்டெரஸ் பங்கேற்றுள்ளார். விழாவைத் தொடங்கி வைத்துப்பேசிய ஜோர்டான் நாட்டு மன்னர், 'எதிர்காலம் குறித்த கனவுகளுடன் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை ஜோர்டான் நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது' என கூறினார். ஐ.நா. தலைவர் ஆன்டோனியோ, 'ஜோர்டான் நாடு சிரியா, இஸ்ரேல், பாலாஸ்தீனம் போன்ற நாடுகளை ஒட்டியிருப்பதால் போர் மற்றும் சர்வதேச அரசியல் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதைத்தாண்டிச் சிறப்பாகச் செயல்படும் ஜோர்டானுக்கு சர்வதேச நாடுகளில் உறுதுணை நிச்சயம் உண்டு' என்றார்.

UN SEC
கூட்டத்தில் பங்கேற்ற ஐநா தலைவர்

உலக பொருளாதாரக் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் க்ளாஸ் செஸ்வாப், 'சண்டைகள் காரணமாக மத்திய கிழக்குப் பிரந்தியம் பின்னடைவில் உள்ளது. சிரியா, பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக முடிவு எட்டப்படும் இதன் மூலம் அகதிகள் பிரச்னைக்கு விடிவுகாலம் கிடைக்கும்' என கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகள் தான் பிரதான நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றை மேம்படுத்துவது குறித்து முடிவுகளும், தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.