ETV Bharat / budget-2019

ரூ. 7.72 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்! - ஆரம்ப சுகாதார நிலையம்

சென்னை : தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட ரூ. 7.72 கோடி மதிப்பிலான பல்வேறு கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

7.72 கோடி ரூபாய் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!

author img

By

Published : Jul 4, 2020, 9:03 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று (ஜூலை 4) திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2017-2018ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-2020ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 8.328 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இந்த அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட 381 கோடியே 76 லட்சம் ரூபாய் ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாகவும் (195 கோடி ரூபாய்), தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு பங்களிப்பாகவும் (186 கோடியே 76 லட்சம் ரூபாய்) வழங்கும்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடங்கள் 132 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டடங்கள் 182 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டடங்கள் போன்றவை 66 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் - நெட்டூரில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்; அரியலூர் மாவட்டம் - கல்லங்குறிச்சி, தருமபுரி மாவட்டம் - பேளாரஅள்ளி, சிவகங்கை மாவட்டம் - திருப்பாச்சேத்தி, தஞ்சாவூர் மாவட்டம் - காசாங்காடு மற்றும் கதிராமங்கலம், தேனி மாவட்டம் - பு. தர்மத்துப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - மேலதேவநல்லூர், திருப்பூர் மாவட்டம் - வெள்ளிரவெளி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 4 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்; பெரம்பலூர் மாவட்டம் - அம்மாபாளையத்தில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம்; தஞ்சாவூர் மாவட்டம் -பந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம்; பெரம்பலூர் மாவட்டம் -பெரம்பலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; என மொத்தம் 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.