செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பெருங்களத்தூர், சேலையூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ந்து பகல், இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவதாக சேலையூர் காவல் உதவி ஆய்வாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனிடையே, முடிச்சூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு சம்பந்தப்பட்ட நபரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், தாம்பரம் வால்மீகி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையன் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர், அவரை கைது செய்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் கார்த்திக்(26) என்பது தெரியவந்தது. அவரிடன் இருந்து 7.2 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது பீர்க்கன்காரணை சேலையூர் காவல் நிலையத்தில் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.