நடிகர் சுஷாந்த் சிங், மன அழுத்தம் காரணமாக மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த ஜூன் 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுஷாந்த் நடிப்பில் கடைசியாக உருவாகிய படம் 'தில் பெச்சாரா' சென்ற மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இத்திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் குறித்து பேசி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "அவர் சென்றது உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்போதும் மக்களுக்காக இருக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார். நான் குழப்பமாக இருக்கும்போதெல்லாம், தீர்வு கொடுக்கும் நபராக இருந்து இருக்கிறார்.
அவரது ’தில் பெச்சாரா’ படத்தை பார்க்கும் போது மிகுந்த வருத்தத்துடன்தான் நான் பார்ப்பேன். ஆனால் திரையில் அவர் மிகவும் அழகாக ஒளிரப் போகிறார் என்பது எனக்குத் தெரியும், அது எனக்கு கொஞ்சம் அமைதியைத் தரும்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இப்படம் மூலம் சஞ்சனா திரையுலகில் அறிமுகமாவதற்கு வாழ்த்துக்கள். இப்படத்தை காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 'மக்கள் உணவுக்காக போராடுகிறார்கள்' - மன்சூர் அலிகான்!